வதிவிட உரிமை அடையாளக்குறி

நீண்ட காலத்திற்கு சுவிஸில் வாழ்ந்து வேலை செய்வதாயின் ஒரு அனுமதிப்பத்திரம் தேவை. பல தரப்பட்ட வதிவிட உரிமைகளுக்கும் நிரந்தர வதிவிட உரிமைக்கும் வித்தியாசங்கள் உண்டு.

அனுமதி வகைகள்

எவர் சுவிஸில் தங்கியுள்ள காலப்பகுதியில் வேலை செய்கிறாரோ அன்றி 3 மாதத்திற்கு மேல் தங்குகிறாரோ அவருக்கு ஒரு அனுமதி தேவைப்படுகிறது. இது மாநில இடப்பெயர்வுத் துறையால் (Abteilung Migration) வழங்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் நீங்கள் தங்கியிருப்பது குறித்த அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் வசிக்கும் நகராட்சிதான் உங்கள் முதல் தொடர்பு மையமாகும். இது குடியிருப்பு அனுமதிக்கான விண்ணப்பங்களை இடம்பெயர்தல் சேவைக்கு அனுப்புகிறது. இந்தச் சேவை பின்னர் கோரிக்கைக்கான முடிவை எடுக்கிறது. இவற்றில் குறுகியகாலத் தங்குமிட அனுமதி (1 வருடம்), தங்குமிட அனுமதி (தேசியத்தைப் பொறுத்து 1 வருடம் அல்லது 5 ஆண்டுகள் வரை வரையறுக்கப்பட்டுள்ளது) மற்றும் நிரந்தர வதிவிட உரிமை (காலவரையற்றது) மற்றும் எல்லை தாண்டிய பயணிகள் அனுமதி வரை வித்தியாசப்படுகிறது.

  • குறுகிய வதிவிடஉரிமை (L) இந்த அனுமதி உள்ளவர்கள் குறிப்பிட்ட கால எல்லை வரை (அதிகமாக 1 வருடம்) முக்கிய காரணத்தையிட்டு சுவிஸில் வாழலாம். அதிகமான EU/EFTA நாட்டுப் பிரஜைகள் வேலை வாய்ப்புக் கிடைத்தால் 3 மாதம் முதல் ஆதாரத்துடன் (வேலைப்பத்திரம்)1 வருடம் வரை இருக்கலாம்.
  • வதிவிட உரிமை (B) இந்த அனுமதி உள்ளவர்கள் நீண்ட காலம் சுவிஸில் தங்கலாம். EU/EFTA நாட்டுப் பிரஜைகள் தமக்கு 1 வருடத்திற்கு மேற்பட்ட வேலைப்பத்திரம் உள்ளது என ஆதாரம் காட்டினால் அவர்கள் 1 வருடத்திற்கு மேலாக வேலை செய்ய முடியும். EU/EFTA நாட்டுப்பிரஜைகளிற்கான அனுமதி 5 வருடங்களிற்கு வழங்கப்படுகிறது. மற்றைய நாட்டவர்களுக்கு 1 வருடத்திற்கு வழங்கப்படுகிறது. அதன்பின்பு அவர்கள் விசா நீடிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த விசா நீடிப்பு எதாவது நிபந்தனைகளையொட்டி கிடைக்கலாம். உதாரணமாக டொச் வகுப்புக்குப் போதல். சில சமயம் ஏதாவது குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அல்லது நலன்புரி விடயங்களில் மற்றவரைச் சார்ந்திருந்தால் வர வேண்டிய விசா நீடிப்புத் தடைப்படலாம். அங்கீகரிக்கப்பட்ட அகதிகளுக்கும் B வதிவிட அனுமதி கிடைக்கும்.
  • நிரந்தர வதிவிட அனுமதி (C) சுவிஸில் தொடர்ந்து 5 அல்லது 10 வருடங்கள் கடந்து தொடர்ந்து வசித்தால் இந்த அனுமதி கிடைக்கும். இங்கேயும், EU / EFTA நாடுகள் மற்றும் மூன்றாம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வெவ்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது.
  • தற்காலிக வதிவிட அனுமதி (F ) அகதி அந்தஸ்து தேடிக் கிடையாதோருக்குத் தற்காலிக வதிவிட அனுமதி கிடைக்கும். இந்த அனுமதி ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க வேண்டும்.

வெளிநாட்டவர் அடையாளஅட்டை

சுவிஸ் நாட்டு அரசாங்கத்தால் சுவிசில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு பயோமெட்ரிக் அட்டையாழ அட்டை (Ausländerausweis) வழங்கப்படுகிறது. இந்த அடையாள அட்டையில் தகவல் சிப் மற்ரும் நிழல் படம் சேர்க்கபடும். அடையாழ அட்டையின் வகையை பெறுத்து ஒரு விரலடையாளமும் சேர்க்கப்படும். இந்த அடையாழ அட்டையை பெற்ருக்கொள்வதற்க்கு. கிளாறுசில் உள்ள அடையாள அட்டை அலுவலகத்தில்( Erfassungszentrum Biometrie) இருந்து ஒரு அழைப்பிதழ் தபால் மூலம் அனுப்பப்படும். அந்த அழைப்பிதழின் பொருட்டு ,அடையாள அட்டை அலுவலகத்திர்கு தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு, தங்களின் அடையாள அட்டைக்கான நிழழ்ப்படம் மற்ரும் கைரேகை எடு்த்துக் கொள்வதர்கான நேரத்தினை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.புதிய அடையாள அட்டைகள் பதிவுத் தபால் மூலம் அனுப்பப்படும். தங்களது அடையாள அட்டை தொலைந்தாலோ அல்லது களவாடப் பட்டாலோ உடநடியாக உங்கள் பகுதியில் இருக்கும் காவல்துறையில் முறைப்பாடு செய்தல் வேண்டும்.

நீடிப்புச் செய்தல்

தேசிய இனத்தைப் பொறுத்தும் தங்கும் நிலையைப் பொறுத்தும் அடையாள அட்டைகள் வெவ்வேறு கால இடைவெளிகளில் நீடிப்புச் செய்து கொடுக்கப்படும். நீடிப்புச் செய்யவேண்டிய காலத்தில் ஒரு பத்திரம் தபால் மூலம் அனுப்ப படும் (Verfallsanzeige) அதை நிரப்பி அதனுடன் பாவிக்கக்கூடிய கடவுச்சீட்டையும் சேர்த்து அடையாள அட்டை முடிவதற்கு 2 கிழமைகளுக்கு முன்பே கிராமசபையில் கையளிக்க வேண்டும். அத்தோடு அடையாள அட்டை நீடிப்பதற்கான கட்டணத்தையும் கிராமசபையில் செலுத்த வேண்டும்.அவர்கள் தொடர்ந்து மாநில இடம்பெயர்வு மற்றும் ஒருங்கிணைப்புத் துறைக்கு (Abteilung für Migration und Integration) அடையாள அட்டை மற்ரும் அடையாள அட்டை நீடிப்பு படிவத்தையும் அனுப்பி வைப்பார்கள். அங்கு நீடிப்புச் செய்வதற்குரிய தகைமைகள் சோதிக்கப்படும். ஏதாவது வினாக்களிருப்பின் இடம்பெயர்வுத் துறையை நாடுங்கள்.

வழக்கமான உள்நாட்டு குடிமையாக்கம்

பத்து வருடங்கள் சுவிட்சர்லாந்தில் வசித்த எவரும் சுவிஸ் உள்நாட்டு குடிமையாக்கம் அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். 8 முதல் 18 வயது வரை சுவிட்சர்லாந்தில் கழித்த ஆண்டுகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும். குடியுரிமை காலம், ஜெர்மன் மொழியில் ஆதிக்கம், ஒருங்கிணைப்பு, நல்ல நிதி மற்றும் குற்றவியல் பதிவு ஆகியவை உள்நாட்டு குடிமையாக்கத்திற்கான முக்கியமான முன்நிபந்தனைகள்.

எளிதாக்கபட்ட உள்நாட்டு குடிமையாக்கம்

சில சட்ட நிபந்தனைகளின் கீழ், சுவிஸ் நாட்டினரின் வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் சுவிஸ் பெற்றோரின் வாரிசுகளுக்கு எளிதாக்கபட்ட உள்நாட்டு குடிமையாக்கம் முதன்மையாகத் திறந்திருக்கும். எளிதாக்கப்பட்ட உள்நாட்டு குடிமையாக்கம் விஷயத்தில், மத்திய அரசு தனியாக உள்நாட்டு குடிமையாக்கத்தைத் தீர்மானிக்கிறது.