எச்சரிக்கைக் கடிதமும்
சரியான நேரத்திற்குக் கட்டணங்களைச் செலுத்தாவிடின் சாதாரணமாக முதலாவது இரண்டாவது எச்சரிக்கைக் கடிதங்கள் வரும் (Mahnung). அதன் பின்பு எந்த நேரத்திலும் கட்டணம் அனுப்பியவர் வசூலிப்பு நடைமுறையை (Betreibung) தொடரலாம். இதன்போது கட்டணம் கட்ட வேண்டியவருக்கு வசூலிப்பு நடைமுறை அலுவலகத்திலிருந்து (Betreibungsamt) கட்டணத்தைக் கட்டச் சொல்லி கடிதம் வரும். அதன் போது மேலதிக சேவைக் கட்டணமும் சேர்ந்து வரும். இந்நடைமுறை சட்டப்படி தவறென கருதுமிடத்து அவர் அதற்கு எதிரான ஒரு சட்டநடவடிக்கையை (Rechtsvorschlag) குறிப்பிட்ட வசூலிப்பு நடைமுறை அலுவலகத்தில் தொடரலாம். கவனம்: வசூலிப்பு நடவடிக்கையானது சம்பளப்பிடிப்பு அல்லது பெறுமதியான பொருட்களை எடுத்துச்செல்லல் போன்ற நடவடிக்கையாக இருக்கலாம். அத்துடன் வசூலிப்புநடைமுறையானது, வசூலிப்பு பதிவேடுகளில் (Betreibungsregister) பதியப்படும்(பணம் செலுத்தப்பட்டிருந்தாலும்). இது மற்றவற்றுடன் வீடுதேடுதலின் போது பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
இடது, தொடர்பு
Betreibungsamt Kanton Glarus / Kontakt und Informationen