அதிகாரம் குவிவதை தடுக்குமுகமாக அரசானது சுவிஸ் மற்றும் மாநிலங்களில் மூன்று சுயாதீனமான தெரிவுகளைப் பிரித்துவைத்துள்ளது : சட்டமன்றம் (சட்டமன்ற அதிகாரம்), நிர்வாகம் (சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம்) மற்றும் நீதித்துறை (நீதித்துறை அதிகாரம்). Glarus மாநிலத்தில் பின்வரும் அதிகாரிகள் இந்தப் பணிகளை மேற்கொள்கின்றனர்: கிராமசபை மற்றும் மாவட்ட நிர்வாகி (60 உறுப்பினர்கள், நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்); நிர்வாகக்குழு: ஆளும் குழு (5 உறுப்பினர்கள், நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்); நீதித்துறை: மாநில அளவில் பல்வேறு நீதிமன்றங்கள்.
அத்துடன் கிராமசபைகளிலும் சட்டசபைகள் (கிராமசபைக்கூட்டங்கள் (Gemeindeversammlung)), மற்றும் ஒரு நிர்வாகி (கிராமசபைபிரதிநிதி (Gemeinderat)) என்பன காணப்படுகின்றன. மத்திய நிர்வாக ரீதியில் சட்டமன்றம் 2 சபைகளைக் கொண்டுள்ளது: தேசிய மற்றும் மாநில பிரதிநிதிகள் (National- und Ständerat). தேசிய அரசு (7 அங்கத்தவர்கள்) என்பது மத்திய அமைச்சர்கள் (Bundesrat). அத்துடன் தேசியரீதியிலும் வேறுவேறான நீதிமன்றங்கள் உள்ளன. உச்சநீதிமன்றமானது மிகவும் உயர்ந்தநிலையில் இருப்பதுடன் உதாரணமாக மாநில நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை மீளாய்வுக்கு தொடர்ந்து ஆராய அனுப்பக்கூடியதாக இருக்கிறது.