மோதல்

குடும்பத்திற்குள்ளோ அல்லது சேர்ந்து வாழ்பவர்களிடையே மோதல் வரும் போது உதவி செய்யப் பல விதமான ஆலோசனை நிலையங்கள் உள்ளன. குடும்பத்திற் குள்ளும் சேர்ந்து வாழ்பவர்களுக்கிடையிலும் வன்முறை தடை செய்யப்பட்டுள்ளது.

சேர்ந்து வாழ்பவர்களிடையே மோதல்

சேர்ந்து வாழ்பவர்களிடையே மோதல் ஏற்படும் போது அவர்கள் நிபுணத்துவமான உதவியை நாடலாம் (Eheberatung). விசேட ஆலோசனை நிலையங்கள் மோதலுக்கு முடிவைத் தேட உதவும். முதலாவது கலந்துரையாடல் இலவசமானது அல்லது மலிவானது.

குடும்பத்திற்குள் மோதல்

பிள்ளைகளுள்ள குடும்பத்திற்குள் சில சமயம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் சுமை தரக்கூடிய கடினமான சூழ்நிலைகள் வரலாம். பெற்றோரால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லையானால் பெற்றோர் உதவியை நாடுவது பரிந்துரைக்கப் படுகிறது. ஆலோசனை மற்றும் சிகிச்சை மையத்தில் (Beratungs-und Therapiestelle) தனிப்பட்ட முறையில் ஆலோசனை கேட்கலாம். பெற்றோர் அவசர அழைப்பிற்கு Elternnotruf) தொலைபேசியில் அல்லது ஈ மெயிலில் நிபுணர்களிடம் பிள்ளை வளர்ப்புப்பற்றியும் கவலைகள் பற்றியும் ஆலோசனைகளைப் பெறலாம். (தொலைபேசி 0848 35 45 55 இலவசம், www.elternnotruf.ch)) சிறுவர்களும் இளையவர்களும் தொலைபேசி மெயில் குறுஞ்செய்தி அல்லது அரட்டை மூலம் சிறுவர்கள்; அவசர அழைப்பிற்கு (Kindernotruf) இல் நாடலாம்.( தொ.பேசி 147 (இலவசம்), www.147.ch).

வீட்டில் வன்முறை

வீட்டில் வன்முறைகள் நடப்பது உத்தியோகபூர்வமான குற்றமாகும். எவர் வன்முறை யைச் செய்கிறாரோ அவர் தண்டணைக்குரியவர் - வன்முறையின் தன்மையைப்பொறுத்து. வன்முறை கணவனுக்கோ மனைவிக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ எதிரானது என்பதில் எவ்வித வித்தியாசமுமில்லை. ஒரு குடும்பத்தில் வன்முறை நடப்பதாக அறிந்து கொண்டால் நிர்வாகங்கள் செயற்பட உசாராகும். வன்முறையால் பாதிக்கப்பட்டவருக்கு இலவசமான நம்பகமான பாதுகாப்பு வசதிகள் கிடைக்கும். விசேட வதிவிடம் (Frauenhaus/ Väterhaus) இங்கு பெண்களோ அல்லது ஆண்களோ தம் பிள்ளைகளுடன் தற்காலிக பாதுகாப்பைத் தேடலாம். சிறுவர்களும் இளையவர்களும் சிறுவர்கள் அவசரத்துடன் (Kindernotruf) நாட (தொ.பேசி 147 (இலவசம்), www.147.ch). எவர் ஒருவர் தன் குடும்ப அங்கத்தவரால் பயமுறுத்தப் படுவதாக உணர்ந்தால் (தொ.பேசி 117) பொலிஸை அழைக்கலாம். இதை ஒருவர் வீட்டில் இருந்து நீண்ட காலமாகப் பயமுறுத்தப்பட்டு வன்முறையை எதிர்நோக்கினாலும் செய்யலாம்.