தாய்மை மற்றும் குடும்பம்

எவருக்கு பிள்ளைகள் உள்ளதோ, அவர்கள் பிள்ளைகள்- மற்றும் கல்விக்கொடுப்பனவுகள் மூலம் ஆதரிக்கப்படுகிறார்கள். தொழில் புரியும் பெண்கள் அவர்களின் குழந்தைப்பிறப்பிற்கு பின்பு குறைந்தது சம்பளத்துடன் கூடிய 14 வார மகப்பேறுவிடுமுறைக்கு உரித்துடையவர்.

மகப்பேறு உதவித்தொகை

பெண்கள், வேலைசெய்யும் காலத்தில் குழந்தை பிரசவித்தால் பெரும்பாலும் அவர்களுக்கு 14 வார மகப்பேற்று விடுமுறைக்கு (Mutterschaftsurlaub) உரிமையுள்ளவராகிறார். இந்தக்காலப்பகுதியில் அவர்களுக்கு குறைந்தது 80% சம்பளம் கொடுக்கப்படும். வேலையிழந்த அல்லது வேலை செய்ய முடியாத பெண்கள் தமது Glarus சமூக சேவை காப்புறுதி மையத்தில் (Sozialversicherungen (SVA)) தமக்கும் சந்தர்ப்பம் உண்டா என விசாரிக்கலாம். இங்கு விசேட விதிமுறைகளுள்ளன. குழந்தை பிறந்து முதல் 8 வாரங்களுக்கு தாயார் வேலை செய்யக்கூடாது (தாய்மைப்பாதுகாப்பு).

தந்தைக்கான விடுமுறை

ஒரு குழந்தை பிறந்த பிறகு தந்தையருக்கு இரண்டு வார ஊதியத்துடன் தந்தைவழி விடுப்புக்கு உரிமை உண்டு. தாயின் மகப்பேறு விடுப்புக்கு மாறாக, தந்தைவழி விடுப்பு நெகிழ்வானது: இது ஒரே நேரத்தில் அல்லது தனிப்பட்ட நாட்களில் எடுக்கப்படலாம். இருப்பினும், குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குள் நடைபெறவேண்டும் .

குடும்பக்கொடுப்பனவு

எவருக்கு குழந்தைகள் உள்ளனவோ அவர்களுக்கு குடும்பக்கொடுப்பனவு (Familienzulangen) பணரீதியாக உதவுகிறது. இவை பிள்ளைகள் 16 வயதுவரை பிள்ளைகள் உதவித்தொகையாகவும் இளையோர் மேற்படிப்புக்காலம் 25 வயதுவரை பயிற்சி உதவித்தொகையாகவும் வழங்குகிறது. இதற்கு வேலை செய்யும் (சொந்தத்தொழில் உட்பட) பெற்றோர் மற்றும் வேலை இல்லாத குறைந்த வருமானமுள்ள பெற்றோருக்கும் உரிமையுள்ளது. வேலை செய்பவர்களுக்கு இது மாதசம்பளத்துடன் கொடுக்கப்படும். குடும்பக்கொடுப்பனவு பற்றிய மேலதிக தகவல்களை தொழில் வழங்குனர் அல்லது Glarus சமூக சேவை காப்புறுதி மையத்தில் (Sozialversicherungen ) பெறலாம். குடும்பக்கொடுப்பனவின் தொகை மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசப்படும்.