ஓய்வு நேரம்

Glarus மாநிலத்தில் ஓய்வு நேரத்தை களிப்பதற்கு பல கவர்ச்சியான வசதிகள் உள்ளன. இதில் முக்கியாமானவை கழகங்களாகும். இவை வௌ;வேறு மனிதர்களை அறிந்துகொள்ள சந்தர்ப்பங்களை வழங்குகின்றன.

கழகங்கள்

Glarus மாநிலத்தில் அதிகமான குடியிருப்பாளர்கள் ஏதோ ஒரு கழகத்தில் (Verein) அங்கத்தவராயிருப்பார்கள்.பல வகைப்பட்ட ரசனைக்கேற்ப அதிக கழகங்கள் உள்ளன. சிறிய கிராமசபைகளில் கூட விளையாட்டு - கலாச்சாரம் மேலும் பல கழகங்கள் உள்ளன. அவை மனிதர் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ள சிறந்த சந்தர்ப்பங்களை ஏற்படுத்துகின்றன.அதிகமான கழகங்கள் அனைத்து மக்களுக்காகவும் திறந்துள்ளன. கழகங்கள் பற்றிய தகவல்களை கிராமசபைகளின் இணையத்தளங்களில் தேடலாம்.

இளையவர்களுக்கான வசதிகள்

Glarus மாநிலத்திலுள்ள இளையவர்கள் தமது ஓய்வு நேரத்தைக் கழிக்கவும் தமது வயதையொத்தவர்களுடன் பழகிக் கொள்ளவும் எனப் பல விசேட வசதிகள் உள்ளன. அதிகமான கிராமசபைகளில் ஓய்வு நேரச் சலுகைகளுடன் கூடிய சந்திப்புக்கள் உள்ளன. இங்குள்ள இளையவர்களைப் பராமரித்து அவர்கள் எண்ணங்களைச் சேர்த்து செயற்திட்டமாக்குவார்கள் (Jugendarbeit). இச் சலுகை வழக்கமாக இலவசமானது. இளைஞர் அமைப்புகளில் ஒரே வயதினர் சேர்ந்து தடகள இயற்கை விளையாட்டுக்களில் பங்கெடுப்பார்கள். இதைக் கழகங்கள் கிராமசபைகள் அல்லது தேவாலயங்கள் நடத்தலாம். இந்த சலுகைகள் அனைத்து இளையோருக்கும் உரியது. வதியும் கிராமசபைகளில் மேலதிக விபரங்களை அறியலாம்.

சுற்றுலாவும் கலாச்சாரமும்.

Glarus மாநிலம் பலவிதமான சுற்றுலாவசதிகளையும் பெருமளவு கலாச்சார வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்கிறது.கிளாரஸ் மனகரத்தில் பல நீர்வீழ்ச்சி மற்றும் ஏரிகள் உள்ளன. அது தவிர பல அழகிய நடைபயணம்- மற்றும் துவிச்சக்கரவண்டி உலாக்களும் உள்ளன. பிரபலமான சுற்றுலா இடங்கள் எல்ம் (Elm) மற்றும் ப்ரான்வால்ட் (Braunwald). இரண்டு பகுதிகளும் நடைபயணம், நடைபயிற்சி அல்லது குளிர்கால விளையாட்டுகளுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றன. பல அருங்காட்சியகங்கள் பல்வேறு தலைப்புகளில் கண்காட்சிகளை வழங்குகின்றன. நேஃபெல்ஸில் உள்ள ஃப்ரூலர்பாலஸ்ட் (Freulerpalast ) Glarus மாநிலத்தின் வரலாற்றைப் பற்றிய ஒரு நுண்ணறிவை வழங்குகிறது. என்னெண்டாவில் உள்ள அன்னா கோல்டி அருங்காட்சியகம் (Anna Göldi Museum) அன்னா கோல்டியின் வரலாறு மற்றும் பிற தலைப்புகள் பற்றிய சுவாரஸ்யமான நுண்ணறிவுகளையும் வழங்குகிறது.கிளாரஸ் கலை இல்லம் (Kunsthaus Glarus) சுவிட்சர்லாந்து முழுவதும் அறியப்படும். கிளார்னர்லேண்ட் சுற்றுலா (Glarnerland Tourismus) உல்லாசப் பயணங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. தற்போதைய கலாச்சார நிகழ்வுகள் பற்றிய தகவல்களையும் கிளார்னர் நிகழ்ச்சி நிரலில் (Glarneragenda) காணலாம்.

விரும்பிவேலைசெய்தல்

விரும்பிவேலைசெய்தல் (Freiwilligenarbeit) என்பது மனிதர்களுக்கும் சூழலுக்கும் இலவசமாக வழங்கும் சமூகரீதியான அர்ப்பணிப்பு. பெருமளவு வேலைகள் சுவிசில் பாரம்பரியமாக விரும்பி வேலை செய்யப்படுகின்றன. பெரும்பாலான வேலைகள் கழகங்களுக்குள் செய்யப்படுகின்றன. இதன்மூலம் கழகங்கள் கலாச்சாரம், விளையாட்டு, சமூக நலன்கள், கல்வி, மிருகங்கள்- மற்றும் சுற்றாடல்பாதுகாப்பு, சுகாதாரம் மறறும் பல வகைகளிலும் ஈடுபடுகின்றன. விரும்பி வேலை செய்பவர்கள் மற்றும் வேலைசெய்யும் சந்தர்ப்பங்கள் பற்றிய தகவல்களை விரும்பி வேலைசெய்யும் விசேடநிலையம் Benevol வில் பெற்றுக்கொள்ளலாம். இடம்பெயர்தல், புகலிடம் மற்றும் அகதிகள் ஆகிய பகுதிகளில் தன்னார்வ பணிகள், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் தன்னார்வப் பணிகளுக்காக ஒருங்கிணைப்பு அலுவலகங்களால் (träffpunktFRAMI) ஏற்பாடு செய்யப்படுகின்றன.

விளையாட்டு ஃ கலாச்சாரம்ஃகல்வி

நிர்வகிக்கக்கூடிய அளவு இருந்தாலும், Glarus மாநிலம் விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் கல்விக்கான சொர்க்கமாக உள்ளது: நீங்கள் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாட விரும்பினால், "இளையவர்களுக்கான வசதிகள்" அத்தியாயத்தில் விளையாட்டுக் கழகங்களுக்கான இணைப்புகளைக் காணலாம். நீங்கள் சுதந்திரமாக விளையாட விரும்பினால், கிளார்னர்லேண்டில் உள்ளும் வெளியிலும் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. உடற்பயிற்சி மையம் முதல் யோகா, பைலேட்ஸ், பார்கோர், மிதிவண்டி பாதைகள் வரை என, வாய்ப்புகள் சிலவற்றைக் குறிப்பிடலாம். சில நிமிடங்களில், ஏரியின் நீர் விளையாட்டுகள் முதல் பனிப்பாறையில் பனி ஏறுதல் வரை உங்கள் இதயம் விரும்பும் அனைத்தையும் அடையலாம். பல்வேறுபட்ட அதிசயிக்கத்தக்க கலாச்சார வாய்ப்புகள் (www.glarneragenda.ch) உள்ளன. பல்கலைக் கழகங்களைத் தவிர, நடைமுறையில் அனைத்து மாநிலங்களிலும் கல்வியின் அடிப்படையில் கலந்து கொள்ளலாம்.