அவசர இலக்கங்கள்

அவசர இலக்கங்கள் தினமும் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளக்கூடியவை. குறுகிய இலக்கங்கள் (3 இலக்கங்கள் ) இலவசமானவை. மற்றைய இலக்கங்களுக்கு சாதாரண தொலைபேசிக்குரிய கட்டணமே அறவிடப்படும்.

பொதுவான அவசர இலக்கம்: 112

இந்த இலக்கத்துடன் பொலிஸ் அவசர நிலையத்திற்கு தொடர்பு கொள்ளலாம். அவசரத்தின் வகையையும் விதத்தையும் பொறுத்து பொலிஸே மற்றைய இடங்களுடன் தொடர்பை ஏற்படுத்திவிடும். (உ+மாக தீயணைப்புப்படை).

பொலிஸ்: 117

இந்த இலக்கத்துடன் பொலிஸ் அவசர நிலையத்திற்குத் தொடர்பு கொள்ளலாம்.

தீயணைப்புப்படை: 118

இந்த இலக்கத்துடன் தீயணைப்புப்படை நிலையத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

முதல் உதவி / பாதுகாப்புச்சேவை: 144

இந்த இலக்கத்தில் பாதுகாப்புச்சேவையின் செயற்பாட்டு நிலையத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
இந்த 144 இலக்கத்தில் உடனடி அம்புலன்ஸ் தேவைக்கோ அல்லது ஆபத்தின் தீவிரத்தை அறியமுடியாமலிருந்தாலோ (உதாரணமாக விபத்தின் பின்பு ) தொடர்பு கொள்ளலாம்.
மற்றைய மருத்துவப்பிரச்சனைகளுக்கு முதலில் குடும்பவைத்தியரைத் தொடர்பு கொள்ளவேண்டும். சிகிச்சை நிலையம் திறந்திருக்காத நேரங்களில் எப்போதும் ஒரு குடும்பவைத்தியர் அவசரசேவை இயங்கும். யார் அவசரசேவை வைத்தியர் என்பது குடும்பவைத்தியரின் தொலைபேசி அழைப்பை எடுத்தால் அதில் பதியப்பட்டோ அல்லது பிரதேசச் செய்தியிலேயோ அறியலாம். அதைவிட நகராட்சி அவசர எண்ணைத் தேர்ந்தெடுக்கலாம்: கிராமசபை Glarus 0844 44 66 44, கிராமசபை Glarus Süd 0844 44 66 55, கிராமசபை Glarus Nord 0844 44 66 33 . இங்கு மருத்துவ ஆலோசனையும் சரியான அருகிலுள்ள இடமும் (வைத்தியர், வைத்தியசாலை) வழிகாட்டப்படும். தாமே ஒரு அவசர சிகிச்சைக்கு (வைத்தியசாலை/ அவசர சிகிச்சை) தேடிச் செல்வதும் சாத்தியப்படலாம்.

அவசர மருந்தகம்: 0800 300 001

அறோ மாநிலத்தில் எந்த மருந்தகம் அவசர சேவையில் (அவசர மருந்தகம்) உள்ளது என்பதை இந்த இலக்கத்தில் தொடர்பு கொண்டு அறியலாம். இந்த மருந்தகம் வழமையாகத் திறந்திருக்கும் நேரங்களைத் தவிர மற்றைய நேரங்களிலும் திறக்கும்.

அவசர காலங்களில், குடும்ப மருத்துவர் அவசர சேவை மூலம் மருந்துகள் வழங்கப்படுகின்றன.
குடும்ப மருத்துவர் அவசர சேவை Glarus Nord (24 மணி நேரமும்) 0844 33 66 33
குடும்ப மருத்துவர் அவசர சேவை Glarus (24 மணி நேரமும்) 0844 44 66 44
குடும்ப மருத்துவர் அவசர சேவை Glarus Süd (24 மணி நேரமும்) 0844 55 66 55

அவசரப் பல்வைத்தியர்: தொலைபேசி 1811 அல்லது 1818

Glarus மாநிலத்தில் எந்தப் பல் வைத்தியர் அவசரசேவையில் இருக்கிறார் என்பதை இந்த இலக்கத்தில் தொடர்பு கொண்டு அறியலாம்.

நஞ்சு - அவசரம்: 145

யாராவது நஞ்சை விழுங்கினால் அல்லது சந்தேகப்பட்டால் இந்த இலக்கத்தில் உள்ள வைத்தியர்களும் நிபுணர்களும் உதவுவார்கள். அவர்கள் நஞ்சுபட்டால் என்ன செய்யும் என விளக்கம் தருவார்கள். உயிராபத்தானநிலையில் இருந்தால் உடனடியாக 144 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். இணையத்தளப் பகுதியில் நஞ்சு /நஞ்சூட்டல் பற்றிய விபரமான தகவல்களைக் காணலாம்.

வளர்ந்தவர்களுக்கான ஆலோசனை: 143

தொலைபேசி இலக்கம் 143 (உதவும் கரங்கள், Dargebotene Hand) இல் யாராவது தம் பிரச்சனைகள் எந்த வகையாக இருந்தாலும் அவை பற்றி யாருடனும் பேச விரும்பினால் (டொச். பிரெஞ்.இத்தாலி மொழிகளில் ) பேசலாம். நெருக்கடியான சூழ்நிலைகளிலும் கவலையான கடினமான சந்தர்ப்பங்களிலும் தொடர்பு கொள்ளலாம். இங்கு பேசப்படுவது நம்பகமானது. அநாமதேயமானது. விரும்பினால் மட்டும் பொருத்தமான உதவிகள் வசதிகள் பற்றிய தகவல்களைப் பெறலாம். இங்கு ஈ - மெயில் மூலமோ அல்லது அரட்டை மூலமோ தொடர்பு கொள்ளலாம்.

சிறுவர்கள் ஃ இளையவர்களுக்கான ஆலோசனை: 147

தொலைபேசி இலக்கம் 147 (Telefon 147) இல் சிறுவர்களும் இளையவர்களும் தம் பிரச்சனைகள் எந்த வகையாக இருந்தாலும் அவை பற்றி யாருடனும் பேச விரும்பினால் (டொச். பிரெஞ்.இத்தாலி மொழிகளில் ) பேசலாம். நெருக்கடியான சூழ்நிலைகளிலும் கவலையான கடினமான சந்தர்ப்பங்களிலும் தொடர்பு கொள்ளலாம். எந்நேரமும் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளலாம்.இங்கு பேசப்படுவது நம்பகமானது. அநாமதேயமானது. ஈ மெயில் குறுஞ்செய்தி அல்லது அரட்டை மூலம் தொடர்பு கொள்ளலாம்.

பெற்றோர் அவசர அழைப்பு: 0848 35 45 55

பெற்றோர் அவசர அழைப்பின் போது (Elternnotruf) பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வளர்ப்புப் பற்றிய கேள்விகளுக்கு நிபுணர்கள் ஆலோசனை தருவார்கள். இங்கு சொந்தப் பிள்ளையின் அல்லது வேறு பிள்ளைகளின் நடவடிக்கைகளால் பதட்டப்பட்டாலோ அன்றி சுமையாக உணர்ந்தாலோ உதவி பெறலாம். சொந்தப்பிள்ளையோ அல்லது வேறு பிள்ளையோ உடல் / உளரீதியாகத் தவறாகக் கையாளப்படுவதாக அச்சப்பட்டாலும் பெற்றோர் அவசர அழைப்பை நாடலாம். இங்கு பேசப்படுவது நம்பகமானது விருப்பத்தின் பேரில் அநாமதேயமாகக் கையாளப்படும். ஈ மெயில் மூலமும் தொடர்பு கொள்ளலாம். மருத்துவக் கேள்விகளுக்கும் பெற்றோர் அவசர அழைப்பு தொடர்ந்தும் உதவி செய்யும்.

வீட்டில் வன்முறை: 055 646 67 36

நேஃபெல்ஸ் (Näfels) பாதிக்கப்பட்டோர் ஆலோசனை மையம், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனையும் ஆதரவும் வழங்குகிறது. ஏற்கனவே கூட்டு வாழ்க்கையில் உள்ளவர்களும் அல்லது கூட்டு வாழ்க்கை முறிக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களும் வன்முறையை (உடல், உளவியல், பாலியல், பொருளாதாரம், சமூகம்) செயல்படுத்தும் பொழுதும் அல்லது அச்சுறுத்தும் பொழுதும் குடும்ப வன்முறை உண்டாகிறது. உறவினர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களும் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். இந்த உரையாடல் ரகசியமானது, விரும்பினால் அநாமதேயமானது மற்றும் இலவசமானது. மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.