குறுகிய விவரணம்

Glarus மாநிலம் சுவிஸிலுள்ள 26 மாநிலங்களில் (உறுப்பினர் மாநிலங்கள்) ஒன்றாகும். கிளாருஸ் மாநிலத்தை உருவாக்கும் இரண்டு பள்ளத்தாக்குகளை உயர்ந்த மலைகள் சூழ்ந்துள்ளன. கிராமப்புறம் Glarus மாநிலத்தின் தனித்துவமாகும். வாக்களிக்கும் உரிமை உள்ளவர்கள் வருடத்திற்கு ஒரு முறை அரசியல் முடிவுகளை எடுப்பதற்காக, திறந்தவெளியில் ஒன்றாகச் சந்திக்கின்றனர்.

எண்ணிக்கைகளும் உண்மைகளும்

Glarus மாநிலத்தில் 40'000 குடியிருப்பாளர்களில் கிட்டத்தட்ட கால்பாகம் வெளிநாட்டவர்கள். 685 சதுர கி.மீ பரப்பளவுள்ள இந்த மாநிலம் மூன்று கிராமசபைகளைக் (Gemeinden) கொண்டுள்ளது: Glarus Nord, Glarus மற்றும் Glarus Süd. தலைநகரம் Glarus ஆகும். அரசமொழி டொச்.

வரலாறு

Glarus மாநிலம் 1352ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டங்களுக்குப் பின் உருவாக்கப்பட்டது. தரிசு நிலப்பரப்பு மாநிலத்தை வடிவமைத்தது. ஆல்பைன் பொருளாதாரத்தால் குடிமக்களுக்கு உணவளிக்க முடியாததால், 1500 மற்றும் 1800 க்கு இடைப்பட்ட காலத்தில் கிளாருஸ்-ஐச் சேர்ந்த பல இளைஞர்கள் வெளிநாட்டில் கூலிப்படையாக வேலை செய்தனர். 16 ஆம் நூற்றாண்டில் வர்த்தகம் (Schiefertische) வளர்ந்தது, 18 ஆம் நூற்றாண்டில் ஜவுளித் தொழில் மாநிலத்தை பொருளாதார மலர்ச்சிக்கு இட்டுச் சென்றது. இது சுவிட்சர்லாந்திற்கு, முன்னர் அறிந்திராத சமூக உரிமைகளை அறிமுகப்படுத்தப்படுவதற்கும் வழிவகுத்தது. இன்றுவரை, Glarus மாநிலம் சுவிட்சர்லாந்தில் அதிக தொழில்மயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகும்.

சம்பிரதாயமும் பாரம்பரியமும்

Glarus மாநிலத்தில் உள்ள சில சம்பிரதாயங்களும் பாரம்பரியங்களும் நீண்ட வரலாற்றை திரும்பிப்பார்க்க உதவுகின்றன. எடுத்துக்காட்டாக, 1835 முதல், நெஃபெல்ஸ் நினைவுநாளன்று (Näfelserfahrt) நெஃபெல்ஸ் போரில் இறந்தவர்களை (1388) நினைவு கூர்கிறது. ஆண்டுதோறும் ஆல்ப்ஸ் ஏறுதல் (Alpaufzüge) மற்றும் ஆல்ப்ஸ் இறங்குதல் (Alpabzüge) பண்டிகைகள் மூலம் ஆல்ப்ஸ் மலையில் கால்நடைகளை மேய விட்டு கோடைகாலம் வரை கொண்டாடுகின்றனர். மாட்டு மணிகளை இளைஞர்கள் ஆண்டு இறுதியில் மணி அடிக்க பயன்படுத்துகிறார்கள்.

Glarus – "Zigerschlitz"

கிளாரஸின் மாநிலம் நகைச்சுவையாக "Zigerschlitz" என்றும் அழைக்கப்படுகிறது. ஒருபுறம் குறுகிய பள்ளத்தாக்கு ஒரு "பிளவை" (Schlitz) உருவாக்குகிறது, மறுபுறம் உலகின் தனித்துவமான ஒரு வகையான பாலாடைக்கட்டி ஜிகர்(Ziger) 1463 முதல் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.