ஆலோசனை நிலையங்கள்

சில ஆலோசனை நிலையங்கள் பொதுவான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் சமயம் மற்றைய நிலையங்கள் குறிப்பிட்ட தலைப்புக்கு அல்லது வாழ்வின் பிரச்சனைகளுக்கு மட்டுமே நிபுணத்துவம் பெற்றிருப்பார்கள். இந்த வசதி வாய்ப்புகள் வாழும் பிரதேசத்திற்கேற்ப மாறுபடும் வழமையாக முதலாவது ஆலோசனை இலவசமானது. அதிகமாகத் தொடர்ந்தும் இலவசமாகலாம். அதிகமான இடங்களில் வெளிநாட்டு மொழிகளிலும் ஆலோசனை பெறலாம்.

பொதுவான ஆலோசனை நிலையங்கள்

ஒருங்கிணைப்புத் துறை (Fachstelle Gesellschaft) வெளிநாட்டவர்களுக்கான மத்திய ஆலோசனை நிலையமாகும். இங்கு வேலை செய்பவர்கள் தினமும் எந்நேரமும் பொதுவான கேள்விகளுக்குப் பதிலளிப்பதுடன் அவர்களுக்குத் தேவையான விசேட ஆலோசனை நிலையங்களைத் தேடிக் கொடுப்பார்கள். அதைவிட தேடுபவர்களுக்குப் பொருத்தமான டொச்மொழி வகுப்புகளையும் உள்வாங்குதல் வசதிவாய்ப்புகளையும் செய்து கொடுப்பார்கள். முதலே பேசி உடன்பட்டால் (தொலைபேசி அல்லது நேரடியாக ) வேற்றுமொழிகளிலும் பேசலாம். முன் அறிவித்தலின்றியும் நேரடியாகப் போய் ஆரம்பத் தகவல்களையும் பெற்று தேவையாயின் ஒரு சந்திப்பிற்கான நேரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். தகவல்களும் ஆலோசனையும் இலவசம்.

இதனுடன் ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டு மொழியில் ஆலோசனை வழங்கும் தனிப்பட்ட சலுகைகளும் உள்ளன. ஒருங்கிணைப்புத் துறையில் இதுபோன்ற ஆலோசனை நிலையத்தைப் பற்றி விசாரிக்கலாம். இதைவிட வெளிநாட்டினர் கழகங்களும், முதலாவது தகவல்களை சொந்த மொழியில் வழங்குவதால் ஒரு நல்ல இடமாக உள்ளது.

கிராமசபை நிர்வாகம் / நகரசபை நிர்வாகம்

அதிகமான சந்தர்ப்பங்களில் வதிவிடங்களின் நிர்வாகங்களே (கிராமசபை நிர்வாகம், Gemeindeverwaltung) முதலாவது சிறந்த தொடக்க நிலையமாகும். இங்கு வேலைசெய்பவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் தருவார்கள் அல்லது அதற்கென உள்ள ஆலோசனை நிலையத்திற்குப் பரிந்துரை செய்வார்கள். Glarus மாநிலத்திலுள்ள அனைத்துக் கிராமசபைகளுக்கும் சொந்தமாக ஒரு இணையத்தளம் உண்டு. அதில் தொடர்பு விபரங்கள், திறந்திருக்கும் நேரங்களும் மேலதிகத் தகவல்களும் இருக்கும்.

நிபுணத்துவம் பெற்ற ஆலோசனை நிலையங்கள்

Glarus மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட தலைப்பிலோ அல்லது எதாவது வாழ்க்கைப் பகுதியிலோ நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்ட ஆலோசனை நிலையங்களின் வசதிகள் பரந்து காணப்படுகிறது. உதாரணத்திற்குச் சில: வயோதிபர்.தொழில் வதிவிட அனுமதி கல்வி திருமணம்ஃவிவாகரத்து வளர்ப்பு குடும்பம் நிதி (கடன் / திட்டமிடல் ) சுகாதாரம் வீட்டு வன்முறை உள்வாங்குதல் உளப்பிரச்சனைகள் சிசுக்கள் பராமரிப்பு பாலியல் அடிமையாதல் சமூகஉதவி சம்பந்தமான கேள்விகள். முதல் ஆலோசனை வழக்கமாக இலவசமானது. ஒரு சில ஆலோசனை நிலையங்களின் தொடர்பு விபரங்கள் தனியான தலைப்புகளில் hallo-glarus.ch இல் காணலாம். ஒருங்கிணைப்புத் துறை (Fachstelle Gesellschaft) இலோ அன்றி வதியும் கிராமசபையிலோ பொருத்தமான ஆலோசனை நிலையங்களைத் தேடலாம்.
டொச் மொழி நன்றாகப் பேசத்தெரியாதவர்களுக்கு ஆலோசனை நிலையத்திற்குப் போக முன்பே மொழிபெயர்ப்பு வசதிகள் பற்றி தகவல் தருவார்கள். ஆலோசனை வேறு மொழிகளில் தரப்படலாம். அன்றி மொழிபெயர்ப்பாளரை ஒழுங்கு செய்து தரப்படலாம். அல்லது சொந்தமாக ஒரு மொழிபெயர்ப்பாளரை அழைத்துவரச் சொல்லலாம்

துவேச அவமதிப்பு

Glarus மாநிலப் பணிப்பின் பெயரில் நடத்தப்படும் ஒருங்கிணைப்புத் துறை (Fachstelle Gesellschaft) துவேச அவமதிப்பிற்குள்ளானோருக்குரிய ஒரு தொடர்பு மையமாகும். இங்கு வழங்கப்படும் ஆலோசனை நம்பகமானதும் அறோ மாநில வாழ் மக்களுக்கு இலவசமானதும் ஆகும். அதைவிட தொலைபேசியில் தனிப்பட்ட உரையாடல்கள் மூலம் ஆலோசனைகளும் பெறலாம்.