பின்தொடர்தல் (Stalking)

பின்தொடர்வது (Stalking) என்பது ஒரு வகையான வன்முறையாகும், மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அதைப் பற்றிப் பேசுவதும் ஆலோசனை பெறுவதும் முக்கியம்.

பின்தொடர்தல் என்றால் என்ன?

பின்தொடர்தல் என்பது ஒரு நபரை அதிகமாகப் பார்ப்பது, தொடர்புகொள்வது, பின்தொடர்வது மற்றும் துன்புறுத்துவது. இது அந்த நபரின் விருப்பத்திற்கு எதிராக செய்யப்படுகிறது. அதைச் செய்பவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவருக்கு (முன்னாள் கணவன்/மனைவி) தெரிந்தவர்கள் ஆனால் அவர்கள் அந்நியர்களாகவும் இருக்கலாம்.

எடுத்துக்காட்டாக: அதிக எண்ணிக்கையிலான குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் பிற செய்திகளை அனுப்புதல், வேலை அல்லது வீட்டில் பதுங்கியிருத்தல், தொலைபேசியில் தொந்தரவு செய்தல், தேவையற்ற பரிசுகள் மற்றும் நபரின் வெளிவட்டாரத்தில் இருந்து தகவல்களைத் தேடுதல்.

பின் தொடர்வது பாதிக்கப்பட்டவரின் ஆரோக்கியத்தை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கும்.

வன்முறையை ஆவணப்படுத்துதல்

பின்தொடர்தல் நிரூபிக்கப்படுவது முக்கியம். உதாரணமாக, பாதிக்கப்பட்ட நபர், தன்னைப் பின்தொடர்ந்தவர்களின் தனிப்பட்ட செயல்களின் நாட்குறிப்பை வைத்திருக்கலாம் (எப்போது, ​​என்ன நடந்தது என்பதை எழுதலாம்), தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு (அண்டை வீட்டார், நண்பர்கள், முதலாளிகள்) தெரிவிக்கலாம் மற்றும் குறுஞ்செய்திகளின் (வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவை) ஸ்கிரீன் ஷாட்கள்/புகைப்படங்களை எடுக்கலாம்).

ஆதரவைத் தேடுங்கள்

பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள், அனைத்து வயது மற்றும் பாலினத்தவர்களுக்காக பாதிக்க்ப்பட்டோர் ஆலோசனை மையம் உள்ளது. இது ரகசியமானது, இலவசம் மற்றும் மொழிபெயர்ப்பு சாத்தியம்.