உதவிகளும் அதற்கான ஆலோசனைகளும்

குடும்ப வன்முறைக்கு உதவி பெறுவது அவசியம் ஆகும்! பல்வேறு நிறுவனங்கள் இதற்காக தகவல், ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்குகின்றன. இது பொதுவாக ரகசியமானது மற்றும் பெரும்பாலும் இலவசமானது அத்தோடு தேவைப்பட்டால் மொழிபெயர்ப்பாளரும் கூட இருப்பார். இந்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும்.

அவசரகாலத்திற்கான் தொலைபேசி இலக்கங்கள்

  • காவல் துறை: தொலைபேசி 117
  • மருத்துவ அவசர ஊர்தி: தொலைபேசி 144
  • கிளாரஸ் அரசு மருத்துவமனையின் 24h/7 கான தொலைபேசி இலக்கம்: தொலைபேசி 055 646 33 33

வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனை

வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள்,அனைத்து வயது மற்றும் பாலினத்தவர்களுக்காக இயங்குகின்றது. அத்தோடு இந்த மையம் ரகசியமானது அதேபோன்று இலவசமாகும் மற்றும் மொழிபெயர்ப்பும் சாத்தியம்.

சுவிட்சர்லாந்தில் உணர்ச்சி முதலுதவிக்கான தொடர்பு புள்ளியாக டார்ஜ்போடீன் ஹேண்ட் (Dargebotene Hand) உள்ளது. இந்த சேவை தொலைபேசி, அரட்டை அல்லது மின்னஞ்சல் மூலம் கிடைக்கிறது, மேலும் இது பெரியவர்களுக்கான சேவை மற்றும் நன்கு பயிற்சி பெற்ற தன்னார்வலர்களால் வழங்கப்படுகிறது. ரகசியமானது மற்றும் இலவசம்.

Dargebotene Hand: தொலைபேசி அல்லது அரட்டை ஆலோசனை 24/7, தொலைபேசி: 143

humanrights.ch வலைத்தளத்தில் உங்களுக்கு உதவக்கூடிய கூடுதல் முகவரிகளைக் காணலாம்.

குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்

கடினமான குடும்ப சூழ்நிலைகளைக் கொண்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இரவும் பகலும் Pro Juventute ஐத் தொடர்பு கொண்டு பேசலாம். தொலைபேசி, அரட்டை, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம்.

  • Pro Juventute: ரகசியமான மற்றும் இலவச ஆலோசனை 24/7
  • தொலைபேசி 147: www.147.ch (அரட்டை: இங்கே குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஆலோசகர்களுடன் அரட்டை அடிக்கலாம்)
  • மின்னஞ்சல் முகவரிக்கு: beratung@147.ch

வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள், அனைத்து வயது மற்றும் பாலினத்தவர்களுக்காக பாதிக்கப்பட்ட ஆலோசனை மையம் உள்ளது. ரகசியமானது, இலவசம் மற்றும் மொழிபெயர்ப்பு சாத்தியம்.

குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக இளைஞர் மற்றும் குடும்ப ஆலோசனை சேவை உள்ளது. இது இலவசம்.

மருத்துவ உதவி

உடல் ரீதியான வன்முறையால் ஏற்படும் காயங்களை கிளாரஸ் மானிலத்து மருதிதுவமனையில் பரிசோதித்து சிகிச்சையளிக்க முடியும். பாலியல் வன்முறையால் ஏற்படும் காயங்களை, நீங்கள் உடனடியாக காவல்துறையிடம் குற்றவியல் புகாரைப் பதிவு செய்ய விரும்பாவிட்டாலும். நீங்கள் ஒரு வன்முறை தாக்குதலுக்காளானதை மருத்துவரிடம் கூறுங்கள், அது கடினமாக இருந்தாலும் கூட. பரிசோதனை ரகசியமானது மற்றும் மருத்துவத் தொழில் ரகசியத்தன்மைக்குக் கட்டுப்பட்டுள்ளது. அதாவது, காயமடைந்த நபர் விரும்பினால் மட்டுமே காவல்துறைக்குத் தெரிவிக்கப்படும். வேறு இடங்களில் மருத்துவ சிகிச்சை பெறும் எவரும், வன்முறையின் அறிகுறிகளை ஆவணப்படுத்த மருத்துவரிடம் கூற வேண்டும்.

  • கிளாரஸ் மானிலத்து மருத்துவமனை தொலைபேசி: 055 646 33 33

குடும்ப மருத்துவர் உங்களைப் பரிசோதித்து, ஏதேனும் காயங்கள் அல்லது உடல் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிப்பார்கள்.

  • பொது மருத்துவர் அவசர சேவை கிளாரஸ் வடக்கு: தொலைபேசி 0844 44 66 33
  • பொது மருத்துவர் அவசர சேவை கிளாரஸ்: தொலைபேசி 0844 44 66 44
  • பொது மருத்துவர் அவசர சேவை கிளாரஸ் தெற்கு: தொலைபேசி 0844 44 66 55

வன்முறையாளர்களுக்கான ஆலோசனை

வன்முறை ஆலோசனை சேவை, வன்முறையில் ஈடுபட்ட அனைத்து வயது மற்றும் பாலின மக்களுக்கும் ஆலோசனை வழங்குகிறது. உங்கள் சொந்த செயல்களுக்குப் பொறுப்பேற்கவும், அவற்றைப் புரிந்துகொள்ளவும், அவற்றை மாற்றவும் நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள். ரகசியமானது மற்றும் இலவசம். மொழிபெயர்ப்புடன் சாத்தியம்.